நெல்லையில் இருந்து திருச்செந்தூர் சென்ற அரசு பஸ்சின் முன்பக்க பம்பர் கழன்று விழுந்தது

 

நெல்லை, செப். 25: திருச்செந்தூரில் நடுரோட்டில் அரசு பஸ்சின் முன்பக்க பம்பர் கழன்று விழுந்தது. கோயில் நகரமான திருச்செந்தூருக்கு நெல்லை, தூத்துக்குடி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று பிற்பகலில் நெல்லையில் இருந்து திருச்செந்தூர் வந்த அரசு பஸ், கோயில் வாசல் வரை சென்று பயணிகளை இறக்கிவிட்டு விட்டு மீண்டும் பகத்சிங் பேருந்து நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. மேல ரதவீதி பகுதியில் வந்தபோது பஸ்சின் முன்பக்க பம்பர் ஒரு பக்கமாக கழன்று கீழே தொங்கியது.

சத்தம் கேட்டு உடனடியாக பஸ்சை டிரைவர் நிறுத்தினார். இதையடுத்து கண்டக்டர் கீழே இறங்கி தரையில் தட்டியவாறு இருந்த பம்பரை பிடித்துக் கொள்ள சிறிது தூரம் மெதுவாக டிரைவர் பஸ்சை ஓட்டியபடி சாலையோரம் நிறுத்தினார். பின்னர் அருகிலுள்ள இருசக்கர வாகன ஒர்க்‌ஷாப்பில் ஸ்பேனர் வாங்கி கழன்ற பம்பரை பொருத்தி கயிற்றால் சப்போர்ட் கயிறு கட்டிக் கொண்டு புறப்பட்டு சென்றனர். கழன்று விழுந்த பம்பரை டிரைவரும், கண்டக்டரும் சரி செய்து கொண்டு புறப்பட்டு சென்றதை பார்த்த பொதுமக்கள் இருவரையும் பாராட்டினர்.

The post நெல்லையில் இருந்து திருச்செந்தூர் சென்ற அரசு பஸ்சின் முன்பக்க பம்பர் கழன்று விழுந்தது appeared first on Dinakaran.

Related Stories: