ஆட்குறைப்பில் இறங்கிய பிரபல ‘அனகாடமி’ கல்வி தொழில்நுட்ப நிறுவனம்: 250 ஊழியர்களை திடீரென பணி நீக்கம்


பெங்களூர்: கல்வி தொழில்நுட்ப நிறுவனமான 250 ஊழியர்களை திடீரென பணி நீக்கம் செய்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 50 விழுக்காடு அளவிற்கு இந்த நிறுவனம் ஆட்குறைப்பு செய்துள்ளது. இந்தியாவின் முக்கிய கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான அனகாடமி பெங்களூருவை தலை மையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. 2015ல் நிறுவப்பட்ட அனகாடமி 50,000க்கும் மேற்பட்ட பதிவுபெற்ற கல்வியாளர்களை கொண்டுள்ள நிறுவனமாகும்.

தொடக்கத்தில் ஏற்றத்திலேயே பயணித்த இந்த நிறுவனம் 2022லிருந்து நிதி நெருக்கடியால் தத்தளிக்க தொடங்கியதால் ஊழியர்கள் சிறிது சிறிதாக பனி நீக்கம் செய்யப்பட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது முக்கிய பொறுப்புகளில் இருந்த 250 பேரை அனகாடமி திடீரென பணி நீக்கம் செய்துள்ளது. இதனால் 2022 முற்பகுதியில் 6 ஆயிரமாக இருந்த அதன் பணியாளர்கள் எண்ணிக்கை தற்போது 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. நிலையான வளர்ச்சி மற்றும் லாபத்தை அதிகரிக்கவே ஆட்குறைப்பு செய்துள்ளதாக அனகாடமி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

The post ஆட்குறைப்பில் இறங்கிய பிரபல ‘அனகாடமி’ கல்வி தொழில்நுட்ப நிறுவனம்: 250 ஊழியர்களை திடீரென பணி நீக்கம் appeared first on Dinakaran.

Related Stories: