கேரளாவில் பரவும் காய்ச்சல் 310 பன்றிகளை கொல்ல முடிவு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் அருகே மாடக்கத்தரை பகுதியைச் சேர்ந்தவர் பாபு. அங்கு ஒரு பன்றிப் பண்ணை நடத்தி வருகிறார். இங்கு செத்த பன்றிகளுக்கு பன்றிக் காய்ச்சல் பரவி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பண்ணையில் வளர்க்கப்பட்டு வரும் 310 பன்றிகளைக் கொல்ல மாவட்ட கால்நடை பாதுகாப்புத் துறை அதிகாரிக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி நேற்று காலை முதல் பன்றிகளைக் கொல்லும் பணி தொடங்கியது. இந்தப் பகுதிகளில் பன்றி, பன்றி இறைச்சியை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது.

The post கேரளாவில் பரவும் காய்ச்சல் 310 பன்றிகளை கொல்ல முடிவு appeared first on Dinakaran.

Related Stories: