நீண்ட இடைவெளிக்கு பிறகு மூணாறுக்கு படையப்பா ‘ரிட்டர்ன்’

மூணாறு : நீண்ட இடைவெளிக்கு பிறகு மூணாறு அருகே உள்ள எஸ்டேட் பகுதியில் படையப்பா காட்டுயானை உலா வர தொடங்கியுள்ளது.கேரள மாநிலம், மூணாறு பகுதியில் படையப்பா என்ற காட்டு யானை மக்களிடையே மிகவும் பிரபலமானது. மூணாறு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அடிக்கடி சாலையோரங்களிலும், நீர்நிலைகளுக்கு அருகிலும், மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளிலும் உலாவும் இந்த யானை நாள் இன்று வரை மக்களை தாக்கியது இல்லை.

அமைதியான குணம் கொண்ட படையப்பா, மூணாறு எஸ்டேட் பகுதிகளில் சுற்றி வந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக தலையார் எஸ்டேட், சட்ட மூணாறு மற்றும் மறையூர் பகுதிகளில் சுற்றித்திரிந்தது. நீண்ட இடைவெளிக்கு பின் மூணாறு பகுதிக்கு வந்துள்ள படையப்பா யானை, தற்போது செண்டுவாரை எஸ்டேட் பகுதியில் முகாமிட்டுள்ளது.

நேற்று முன்தினம் செண்டுவாரை எஸ்டேட்டில் தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த படையப்பா, அங்குள்ள கேரட், பீன்ஸ் உள்பட உள்ள விவசாய பயிர்களை நாசம் செய்தது. படையப்பா தாக்குதல் குணமுடைய யானை இல்லை என்றாலும், பகல் நேரங்களில் தேயிலை தோட்டங்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் சுற்றித் திரிவதால் அச்சம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

The post நீண்ட இடைவெளிக்கு பிறகு மூணாறுக்கு படையப்பா ‘ரிட்டர்ன்’ appeared first on Dinakaran.

Related Stories: