வெளியகரம் ஆற்றுப்படுகையில் கிணறுகள் அமைத்து குழாய் மூலம் கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் பணி: கலெக்டர் ஆய்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெளியகரம் ஆற்றுப்படுகையில் கிணறுகள் அமைத்து குழாய் மூலம் திருத்தணி, பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு உட்பட்ட 3 கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் திட்ட பணிகள் நடைபெற்று வருவதை நேரில் ஆய்வு செய்தார். இந்த பணி நிறைவடைந்தால் திருத்தணி ஊராட்சி ஒன்றியம் எஸ்.கார்த்திகேயபுரம், கன்னிகாபுரம், தாடூர், சிறுகளூர், எஸ்.அக்ரஹாரம், பள்ளிப்பட்டு ஒன்றியம் சி.எஸ்.கண்டிகை, ஆர்.கே. பேட்டை ஒன்றியம், வங்கனூர், செல்லத்தூர், வி.எஸ்.ஜி.புரம் ஆகிய கிராமங்களுக்கு தினமும் 276 மில்லி லிட்டர் குடிநீர் வழங்கப்படும்.

இத்திட்டம் குடிநீர் ஆதாரத்திற்கான சிறப்பான திட்டம். இத்திட்டம் கிராம மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்கும் என கலெக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்தார். இதில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் அமலதீபன், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபா, வட்டாட்சியர் சிவகுமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் ஜெயசுதா, உதவி பொறியாளர் சம்பத்குமார், நீர்வள உதவி செயற்பொறியாளர் விஸ்வநாதன், இளநிலை பொறியாளர் சுந்தரன், உதவி பொறியாளர் அகிலன் ஆகியோர் உடனிருந்தனர்.

 

The post வெளியகரம் ஆற்றுப்படுகையில் கிணறுகள் அமைத்து குழாய் மூலம் கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் பணி: கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: