இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.50.87 லட்சம்

சாத்தூர்: சாத்தூர் அருகே, இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் நேற்று நடைபெற்றது. இதில், ரூ.50.79 லட்சத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே, இருக்கன்குடியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு மாதந்தோறும் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்படும்.

இதன்படி, நேற்று 10 நிரந்தர உண்டியல், ஒரு கோசாலை உண்டியல் மற்றும் அன்னதான உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இப்பணிக்கு மதுரை மீனாட்சியம்மன் கோயில் உதவி ஆணையர் யக்ஞ.நாராயணன் மற்றும் மாரியம்மன் கோயில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தனர். காணிக்கை எண்ணும் பணியில் மகளிர் சுயஉதவி குழு உறுப்பினர்கள், கோயில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதில், ரூ.50 லட்சத்து 87 ஆயிரத்து 186, தங்கம் 224 கிராம், வெள்ளி 740 கிராம் ஆகியவை காணிக்கையாக கிடைத்தன.

The post இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.50.87 லட்சம் appeared first on Dinakaran.

Related Stories: