10ம் ஆண்டில் சென்னை மெட்ரோ: இதுவரை 29.87 கோடி பேர் பயணம்


சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், நீண்ட தொலைவை குறைந்த நேரத்தில் கடப்பதற்காகவும் மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, சென்னையில் விமான நிலையம் – விம்கோ நகர், சென்ட்ரல்- பரங்கிமலை ஆகிய 2 வழித்தடங்களில் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆரம்பம் முதலாகவே சென்னைவாசிகள் மத்தியில் மெட்ரோ ரயில் சேவைக்கு சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது. இதை தொடர்ந்து தற்போது ₹63,246 கோடி மதிப்பில் 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணி நடைபெறுகிறது. இதில், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கிலோ மீட்டர் தொலைவுக்கும், மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீட்டருக்கும், மாதவரம் முதல் – சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர் தூரத்துக்கும் என 118.9 கி.மீ தூரத்துக்கு புதிய வழித்தடங்கள் அமைய உள்ளன.

சென்னையில் முதற்கட்ட மெட்ரோ ரயில் சேவை தொடங்கி, 9 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில், தற்போது 10ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கடந்த 9 ஆண்டுகளில் மெட்ரோ ரயில்களில் 29 கோடியே 87 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில்களில் பயண அட்டை, சிங்கார சென்னை அட்டை, கியூஆர் குறியீடு உள்ளிட்டவைகளை பயன்படுத்தி டிக்கெட் எடுத்துக்கொண்டால் 20 விழுக்காடு சலுகைகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post 10ம் ஆண்டில் சென்னை மெட்ரோ: இதுவரை 29.87 கோடி பேர் பயணம் appeared first on Dinakaran.

Related Stories: