களைகட்டிய பைன் பாரஸ்ட்

ஊட்டி : ஊட்டி அருகேயுள்ள பைன் பாரஸ்ட் பகுதி சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் களைகட்டியுள்ளது. தமிழகத்தில் தற்போது பள்ளிகளில் தேர்வுகள் முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை துவங்கியுள்ளது. இது தவிர, சமவெளி பகுதிகளில் வெயில் கொளுத்துவதால் குளு குளு ஊட்டியை நோக்கி சுற்றுலா பயணிகள் படையெடுக்கின்றனர்.

ஊட்டி-கூடலூர் சாலையில் தலைக்குந்தா அருகே காமராஜர் சாகர் அணையின் ஒரு பகுதியில் பைன் மரங்கள் நிறைந்த வனபகுதி உள்ளது. வனங்களுக்கு நடுவே உள்ள இந்த பைன் பாரஸ்ட் பகுதியை பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவது வழக்கம்.

இதனால், இந்த பகுதியில் எப்போதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். பைன் பாரஸ்ட் நடுவே புகைப்படம் எடுத்து கொள்ளவும் ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக கேரளா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர். இதனால் அப்பகுதி களைகட்டியுள்ளது. இதேபோல், சூட்டிங்மட்டம் பகுதியிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்படுகிறது. அங்கு குதிரை சவாாி செய்து மகிழ்கின்றனா். கேரளாவில் தேர்தல் முடிவடைந்தவுடன் அங்கிருந்து வர கூடிய சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post களைகட்டிய பைன் பாரஸ்ட் appeared first on Dinakaran.

Related Stories: