திருச்செந்தூரில் 2வது நாளாக அலைமோதும் கூட்டம்: சித்ரா பவுர்ணமியையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை!!

தூத்துக்குடி: சித்ரா பவுர்ணமியையொட்டி திருச்செந்தூர் முருகன் கோயிலில் 2வது நாளாக குவிந்துள்ள பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து முருகனை வழிபடுவது வழக்கம். இந்நிலையில், திருச்செந்தூர் கோவிலில் சித்திரை மாத வசந்த திருவிழா கடந்த 14ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 10ம் திருநாளான நேற்று அதிகாலை நடைதிறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

மேலும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தன்று ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். அதன்படி நேற்று ஏராளமான பக்தர்கள் நேற்று காலையில் இருந்தே கோவிலில் குவிந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சுமார் 5 மணி நேரத்திற்கு மேல் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பின்னர் இரவில் ஏராளமான பக்தர்கள் கடற்கரையில் அமர்ந்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

 

The post திருச்செந்தூரில் 2வது நாளாக அலைமோதும் கூட்டம்: சித்ரா பவுர்ணமியையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை!! appeared first on Dinakaran.

Related Stories: