தமிழ்நாட்டில் அமைதியாக நடந்து முடிந்தது மக்களவைத் தேர்தல்: போலீசாருக்கு காவல் ஆணையர் பாராட்டு

சென்னை: தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் இன்று ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் 39 மையங்களில் எண்ணப்படுகின்றன. மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

மின்னணு வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட உள்ளது. 39 மையங்களிலும் 15 கம்பெனி துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தமிழ்நாடு அரசின் சிறப்பு காவல் படை மற்றும் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் அமைதியாக தேர்தல் நடந்து முடிந்த நிலையில் தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இன்று சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவினை அமைதியாகவும் முறையாகவும் எவ்வித அசம்பாவிதமும் இன்றி நடத்திட ஒத்துழைத்த அனைத்து பொதுமக்களுக்கும், சென்னை பெருநகர காவல் துறையின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். பொதுமக்களுக்கான சேவை சார்ந்த எங்கள் பணியைத் தொடர நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்றும் கூறியுள்ளார்.

The post தமிழ்நாட்டில் அமைதியாக நடந்து முடிந்தது மக்களவைத் தேர்தல்: போலீசாருக்கு காவல் ஆணையர் பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: