போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட இடங்களில் பேருந்துகள் இயக்கத்தில் அதிகபட்சம் 15 நிமிடங்கள் வரை மட்டுமே காலதாமதம் ஏற்பட்டது. மழை காரணமாக பேருந்துகள் எதுவும் ரத்து செய்யக்கூடாது என்றும் அனைத்து வழித்தடங்களிலும் பேருந்துகள் முழு சுற்றையும் நிறைவு செய்வதை பணிமனை மேலாளர்கள் உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டது. பேருந்துகள் இயக்கம் தொடர்பாக புகார்கள் எதுவும் நேற்று பெறப்படவில்லை.
அதேபோல சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் 2100 பேருந்துகள் முழுவதுமாக இயக்கப்பட்டது. மேலும் பேருந்துகள் இயக்கம் மற்றும் பொது மக்கள் புகார்கள் குறித்து தொடர்ந்து கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post தொடர் மழை பெய்தாலும் பேருந்துகள் இயக்கம் சீராக இருந்தது: போக்குவரத்து துறை தகவல் appeared first on Dinakaran.