“தமிழ்நாட்டில் இவ்வாண்டே பால் கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்”: அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

குமரி: தமிழ்நாட்டில் இவ்வாண்டே பால் கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பால் உற்பத்தியைப் பெருக்குவது, உற்பத்தியாளருடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவது உள்ளிட்டவை முதலமைச்சரின் பரிசீலனையில் உள்ளது, விரைவில் நடைமுறைப்படுத்தப்படும். வாடிக்கையாளர்களுக்கு தரமான பால் மலிவான விலையில் கொடுப்பதற்கான திட்டங்கள் ஒவ்வொன்றாக தீட்டப்படும்.

தினந்தோறும் 45 லட்சம் லிட்டர் பால் கையாளும் திறன் இவ்வாண்டு இறுதிக்குள் 70 லட்சம் லிட்டராக அதிகரிக்கப்படும் என கூறினார். ஆவின் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கவில்லை. ஆவினில் மூலதன செலவுகளை உயர்த்தி இதர செலவுகளை குறைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், மல்யுத்த வீரர்களின் போராட்டம் தொடர்பாக ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்காதது மிகப்பெரிய தவறு. குற்றம்சாட்டப்பட்ட பாஜக எம்.பி.யை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என குறிப்பிட்டார்.

The post “தமிழ்நாட்டில் இவ்வாண்டே பால் கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்”: அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: