கரூர், ஜன. 30: கரூர் தாலுகா அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. கரூர் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த காத்திருப்பு போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பிரபு தலைமை வகித்தார்.
முன்னாள் மாவட்ட துணைத்தலைவர் ரவீந்திரன் முன்னிலை வகித்தார். வட்ட தலைவர் பாலசுப்ரமணியன் வரவேற்றார். மாவட்ட துணைச் செயலாளர் தனபால் கோரிக்கை குறித்து பேசினார். வட்டச் செயலாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினார். இதில், அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
கிராம நிருவாக அலுவலர்களின் டிஎன்பிஎஸ்சி நேரடி நியமன முறையில் கல்வித்தகுதியை பட்டப்படிப்பு என மாற்றியமைக்க வேண்டும். தேர்வு நிலை கிராம நிருவாக அலுவலர்களுக்கு முதுநிலை வருவாய் ஆய்வாளர் நிலையில் ஊதியமும், சிறப்பு நிலை கிராம நிருவாக அலுவலர்களுக்கு துணை வட்டாட்சியர் நிலையில் ஊதியமும் வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
