கரூர், ஜன. 23: தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் மாநில நலச்சங்கம் சார்பில் கரூர் மாவட்ட கலைவிழா மாநாடு கரூர் தான்தோன்றி மலையில் நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் பழனி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பொன்னுவேல், துணைத் தலைவர் முருகன், மாநில பொறுப்பாளர்கள் வானதி கதிர், நிர்வாகிகள் குப்புசாமி, பாசூர் செல்வராஜ், மாநில பொருளாளர் மாரியாப்பிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கலைகுப்பம் இயல், இசை, நாடக மன்ற தலைவர் சத்யராஜ் கலந்து கொண்டு பேசியதாவது: தமிழக அரசு 58 வயது நிரம்பிய கலைஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் வழங்குவதில் அரசின் சான்றிதழ் பெறுவதற்கு தாமதம் செய்யக்கூடாது. மேலும் கலைஞர்களை அரசு அதிகாரிகள் கண்ணியத்துடன் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் ஏராளமான கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
