கரூர், ஜன. 30: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பொறியாளர் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு அரசு வேளாண்மை பட்டதாரிகள் சங்கம் ஆகியவற்றின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கருர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு பொறியாளர் கூட்டமைப்பின் கரூர் மாவட்ட நிர்வாகி (பொ) முருகவேல், வேளாண்மை பட்டதாரிகள் சங்க நிர்வாகி காதர்மொய்தீன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். தமிழ்நாடு பொறியாளர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன போன்ற 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், வேளாண்மைத்துறையில் உள்ள தொழில்நுட்ப அலுவலர்களுக்கு 6வது ஊதியக்குழுவின்படி ஊதியத்தை உறுதி செய்து அதற்கு இணையாக 7வது ஊதியக்குழுவில் ஊதியம் வழங்கிட வேண்டும் என வேளாண்மை பட்டதாரிகள் சங்கத்தின் சார்பிலும் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
