கரூர் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கரூர், ஜன. 28: வங்கிகளில் வாரத்திற்கு ஐந்து நாட்கள் மட்டும் வேலை வழங்க வலியுறுத்தி அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வங்கிகளில் 2 மற்றும் 4வது சனிக்கிழமைகள் விடுமுறையாக உள்ள நிலையில் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்க வங்கி ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதன்படி, வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே வேலை என்ற முறையை நடைமுறைப்படுத்தக் கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று கரூரில் தலைமை தபால் நிலையம் அருகே அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க நிர்வாகி பிரசாந்த் தலைமை ஏற்றார். அனைத்து சங்க நிர்வாகிகளும், உறுப்பினர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

 

Related Stories: