வேலாயுதம்பாளையம், ஜன. 23: கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக கடந்த ஒரு வருடமாக ஓம் பிரகாஷ் பணியாற்றி வந்தார். ஓம் பிரகாஷ் தற்பொழுது திருச்சி மாவட்டம் துறையூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் போலீஸ் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று இருந்த நந்தகுமார் வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டிருந்தார்.
வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்ட அவர் நேற்று பணி ஏற்றுக்கொண்டார். அவருக்கு போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், தலைமை காவலர்கள், போலீசார் வாழ்த்து தெரிவித்தனர் . அதேபோல் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், பல்வேறு துறை அரசு அலுவலர்கள், சமூக நல ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமாரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
