கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுகாதார வளாகம் அமைக்க வலியுறுத்தல்

கரூர், ஜன. 28:கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் தாந்தோணிமலையில் செயல்பட்டு வருகிறது. வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். மேலும், திங்கள் முதல் வெள்ளி வரையிலும், பல்வேறு காரணங்களுக்காகவும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் வந்து செல்லும் பொதுமக்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில் சுகாதார வளாகம் இல்லாதது பெரிய குறையாக உள்ளது.அரசு அலுவலர்கள் பயன்படுத்தும் வகையில் அனைத்து துறைகளிலும் சுகாதார வளாகம் உள்ளது. ஆனால், பொதுமக்கள் எளிதில் பயன்படுத்தும் நிலையில் சுகாதார வளாகம் இல்லாமல் உள்ளது.

எனவே, கலெக்டர் அலுவலகம் வந்து செல்லும் மக்கள் நலன் கருதி வளாக பகுதியில் சுகாதார வளாகம் அமைக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுகாதார வளாகம் அமைத்து தர தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கைவைக்கப்பட்டுள்ளது.

 

Related Stories: