ஏடிஜிபி ஜெயராம் மீதான சஸ்பெண்ட் உத்தரவு ரத்து: தமிழக உள்துறை உத்தரவு

 

சென்னை: ஏடிஜிபி ஜெயராம் மீதான சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழக காவல் துறையில் ஆயுதப்படை கூடுதல் டிஜிபியாக ஜெயராம் பணியாற்றி வந்தார். இவர் தனது தோழியான மகேஸ்வரியின் வேண்டுகோளுக்கு இணங்க காதல் விவகாரத்தில் தலையிட்டு வாலிபரை கடத்த தனது வாகனத்தை வழங்கியதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து வாலிபரின் தாய் திருவாலங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்திய போது, கூடுதல் டிஜிபி ஜெயராம் காரில் வாலிபரை இறக்கி விட்டது உறுதியானது.

இது தொடர்பாக நீதிமன்றம் உத்தரவின்பேரில் ஏடிஜிபி ஜெயராமன் கைது செய்யப்பட்டார். அதன் அடிப்படையில் ஆள் கடத்தலுக்கு கார் கொடுத்து உதவிய குற்றச்சாட்டில் ஏடிஜிபி ஜெயராம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். துறைரீதியிலான விசாரணை நடந்து வந்த நிலையில் சஸ்பெண்டு உத்தரவு ரத்து செய்து தமிழக உள்துறை உத்தரவிட்டுள்ளது. பணியிடம் ஒதுக்கப்படாமல் உள்ள நிலையில் ஜெயராமுக்கு இந்த வாரம் பணியிடம் ஒதுக்கி உத்தரவு பிறக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வருகிற மே மாதத்துடன் ஜெயராம் ஓய்வுபெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: