ஈஷா அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டுள்ள எரிவாயு தகன மேடையை அப்புறப்படுத்த கோரிய வழக்குகள் தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஈஷா அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டுள்ள எரிவாயு தகன மேடையை அப்புறப்படுத்த கோரிய வழக்குகள் ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. கோவை மாவட்டம் இக்கரை போளுவாம்பட்டியில் கட்டப்பட்ட எரிவாயு தகன மேடைக்கு வழங்கப்பட்ட அனுமதிக்கு எதிராக குடியிருப்பு பகுதியில் இருந்து 90 மீட்டர் தொலைவில் மாயனம் அமைக்க உரிமை வழங்குவதை தடைசெய்யவில்லை. தகன மண்டபம் கட்டுவது பொது நலனுக்கு எதிரானது என்று கூற முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Related Stories: