சிவகாசியில் தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து

சிவகாசி, ஜன. 24: சிவகாசியில் தீப்பெட்டி ஆலையில் தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகாசி பிகேஎஸ் ஆறுமுக நாடார் தெருவை சேர்ந்தவர் ராம்குமார். இவருக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலை சிவகாசி-சாத்தூர் ரோட்டில் சிவகாமிபுரம் காலனியில் உள்ளது. இந்த ஆலையில் நேற்று வழக்கம்போல் தீப்பெட்டி உற்பத்தி பணிகள் நடைபெற்று வந்தது. அப்போது உராய்வு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் உடனடியாக வெளியேறினர். தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் பொருட்கள் எரிந்து நாசமாகின. சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர். தீப்பெட்டி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

 

Related Stories: