கோவை, ஜன. 24: நீதிமன்றங்களில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை சுமூகமான முறையில், விரைவாக தீர்வு காண உதவும் சமரச தீர்வு மையங்களின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்டுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சமரச தீர்வு மையம் சார்பில், வழக்குகளில் சமசர தீர்வு குறித்து தமிழகம் முழுவதும் நீதிபதிகள் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நேற்று சமரச தீர்வு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சியை மாவட்ட முதன்மை நீதிபதி விஜயா துவக்கி வைத்தார். இதில் சமரச தீர்வர்கள், வழக்கறிஞர்கள், சட்ட பணியாளர்கள், பொதுமக்கள் திரளாக விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி கலந்து கொண்டனர்.
