புகையிலை விற்ற இருவர் கைது

வருசநாடு, ஜன.24: தேனி மாவட்டம், மயிலாடும்பாறை மெயின் ரோட்டில் மாசாணம் என்பவரது மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக மயிலாடும்பாறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்த கடையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் அந்த கடையில் 1,605 கணேஷ் புகையிலை பாக்கெட்டுகளை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.12,840 என கூறப்படுகிறது. இது தொடர்பாக மாசாணத்திடம் போலீசார் நடத்திய விசாரணையில், பெரியகுளத்தைச் சேர்ந்த இளங்கோவன் (57), தேனியைச் சேர்ந்த பூந்தி (48) ஆகியோரிடம் புகையிலை பொருட்களை வாங்கி வந்து விற்பனை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிந்த போலீசார் மாசாணம், இளங்கோவன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பூந்தி என்பவரை தேடி வருகின்றனர்.

 

Related Stories: