பெங்களூரு : கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவைகளுக்கு அம்மாநில அரசு விதித்திருந்த தடையை ரத்து செய்தது கர்நாடக உயர் நீதிமன்றம். இருசக்கர வாகனங்களை ஒப்பந்த வாகனங்களாக பதிவு செய்ய அனுமதி அளித்தும் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் Ola, Uber, Rapido போன்ற நிறுவனங்கள் மீண்டும் தங்களது சேவையைத் தொடங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
