மெல்பெர்ன்: நியூசிலாந்தின் ஆக்லாந்தில் இருந்து தென்கிழக்கே சுமார் 230 கி.மீ தொலைவில் மவுங்கானுய் மலை உள்ளது. இந்த மலையடிவாரத்தில் உள்ள மவுவோ பகுதி சுற்றுலா தலம் ஆகும். சுற்றுலா பயணிகள் முகாம்களை அமைத்து தங்குவார்கள். மவுங்கானுய் மலை பகுதியில் கடந்த சிலநாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மலையடிவாரத்தில் நேற்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. மவுவோ பகுதியில் உள்ள சுற்றுலா முகாம் தலத்தில் பாறைகள், மண் சரிந்து விழுந்ததில் முகாம் வேன்கள், கார்கள், கூடாரங்கள் மற்றும் குளியலறை ஆகியவை சேதமடைந்து மண்ணில் புதைந்தன. இந்த நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலியாகினர். பலர் மாயமாகி விட்டனர்.
