சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து அதிமுகவை மீட்கப்போவதாக கூறி வந்தனர். அமித்ஷா உத்தரவின்பேரில் தனிக்கட்சி தொடங்கும் பணியில் ஓ.பன்னீர்செல்வம் ஈடுபட்டுள்ளார். இது வைத்திலிங்கத்திற்கு பிடிக்கவில்லை. இதனால் அவர் திமுகவில் இன்று இணைய முடிவு எடுத்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் மகளிர் அணி நிர்வாகியும், பேச்சாளருமான காளியம்மாள் இன்று அதிமுகவில் இணைகிறார். நாம் தமிழர் கட்சியின் நட்சத்திர பேச்சாளரும், மகளிர் அணி நிர்வாகியுமான காளியம்மாளுக்கும், சீமானுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அவர் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்.
காளியம்மாளை சீமான் தரக்குறைவாகவும் விமர்சனம் செய்ததாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியாகின. இதனால் கட்சியில் இருந்து அவர் ஒதுங்கியிருந்தார்.தற்போது அவர் அதிமுகவில் சேர திட்டமிட்டுள்ளார். இதற்காக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். அதைத் தொடர்ந்து இன்று அவர் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணைகிறார்.
