கேரளா பேருந்து சம்பவம்: பெண் யூடியூபர் ஷிம்ஜிதா கைது

 

திருவனந்தபுரம்: கேரளாவில் அவதூறு வீடியோவால் தீபக் என்பவரை தற்கொலைக்கு தூண்டியதாக யூடியூபர் ஷிம்ஜிதா கைது செய்யப்பட்டுள்ளார். பேருந்து பயணத்தின்போது தீபக் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக ஷிம்ஜிதா வீடியோ வெளியிட்டிருந்தார்; ஷிம்ஜிதா வெளியிட்ட வீடியோ வைரலானதை அடுத்து அவமானத்தில் தீபக் (41) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தீபக் தற்கொலை செய்ததை அடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக ஷிம்ஜிதா மீது வழக்குப் பதியட்டிருந்தது

தனியார் ஆயத்த ஆடை நிறுவனத்தின் விற்பனை அலுவலர் தீபக்கை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஷிம்ஜிதா செயலுக்கு கண்டனம் வலுத்த நிலையில் போலீசார் வழக்குப் பதிந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். யூடியூபர் ஷிம்ஜிதா வெளிநாடு தப்பி செல்வதை தடுக்க லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வடகராவில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த ஷிம்ஜிதாவை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஷிம்ஜிதாவை கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் வைத்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

Related Stories: