பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது

 

சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கியது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.ரவி வெளியேறினார். தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பதிலாக தேசிய கீதம் முதலில் பாட சொன்னதற்கு மறுத்ததால் ஆளுநர் வெளிநடப்பு செய்தார்.

ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக அவர் ஏதாவது ஒரு காரணத்தை ெசால்லி அந்த உரையை முழுவதுமாக படிக்காமல் புறக்கணித்து வருவதால் இன்று நடைபெறும் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை முறையாக படிப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு ஆண்டும் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. இதில், பங்கேற்று உரையாற்றுவதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி காலை 9.10 மணிக்கு லோக் பவனில் இருந்து காரில் புறப்பட்டு தலைமைச்செயலகம் வரும் அவருக்கு பேண்டு வாத்தியம் முழங்க போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் மு.அப்பாவு சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வரவேற்று சட்டப்பேரவை வளாகத்துக்கு அழைத்து வந்தார். தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும். அதை தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்த தொடங்குவார். அவரது உரையில் தமிழக அரசின் செயல்பாடுகள், கொள்கை, சாதனைகள் இடம்பெற்றிருக்கும். கூட்ட முடிவில் தேசியக்கீதம் இசைக்கப்படும். ஆளுநர் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தி முடித்ததும், அந்த உரையை தமிழில் சபாநாயகர் அப்பாவு வாசிப்பது மரபாகும். அத்துடன் அன்றைய கூட்டம் நிறைவடையும்.

 

Related Stories: