வாரணாசி மணிகர்ணிகா காட் குறித்த ஏஐ புகைப்படங்களை பதிவிட்ட 2 எம்பிக்கள் மீது போலீஸ் வழக்கு

வாரணாசி: வாரணாசியில் மிக பழமையான மயானமான மணிகர்ணிகா காட்-ஐ சீரமைக்கும் பணிகளை தமிழகத்தை சேர்ந்த ஒரு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. சீரமைப்பு பணியின் போது நூற்றாண்டு பழமையான அஹில்யாபாய் ஹோல்கரின் சிலை உள்ளிட்டவை சேதப்படுத்தப்பட்டுள்ளதாக கூறி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மணிகர்ணிகா தொடர்பாக ஏஐ மூலம் உருவாக்கிய போலி புகைப்படங்களை எக்ஸ் பயனர் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாக அந்த நிறுவனத்தை சேர்ந்த மனோ என்பவர் போலீசில் புகார் அளித்தார்.இந்த நிலையில் ஏஐ மூலம் உருவாக்கிய போலி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்ததாக ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், காங்கிரஸ் எம்பி பப்பு யாதவ் உள்ளிட்ட 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories: