மும்பை மாநகராட்சியை பிடிக்க துவங்கியது பேரம் சிவசேனா கவுன்சிலர்கள் ஓட்டலில் சிறை வைப்பு

மும்பை: சமீபத்தில் நடந்த மும்பை மாநகராட்சி தேர்தலில் ஆளும் மகாயுதி கூட்டணி கட்சிகளான பாஜவும் சிவசேனாவும் இணைந்து போட்டியிட்டன. இதை எதிர்த்து உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியும் ராஜ்தாக்கரேவின் எம்என்எஸ் கட்சியும் களமிறங்கின. காங்கிரஸ் கட்சி, பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாடி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. தாக்கரே சகோதரர்கள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றிணைந்த நிலையில், இது எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை ஈட்டவில்லை.

இந்நிலையில், பாஜவை சேர்ந்தவர் மேயர் ஆவாரா அல்லது பாஜவை சேர்ந்தவர் மேயர் ஆவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மும்பையில் ஷிண்டே சிசேனா 29 இடங்களில்தான் வென்றுள்ளது. ஆனால் உத்தவ் சிவசேனா 65 இடங்களில் வென்றுள்ளது. கடவுள் விரும்பினால் தங்கள் கட்சியை சேர்ந்த ஒருவரே மும்பையில் மேயராக வருவார் என்று உத்தவ் தாக்கரே நேற்று கூறியிருந்தார். எனவே, சிவசேனா கவுன்சிலர்களை இழுத்து மேயர் பதவியை கைப்பற்ற உத்தவ் திட்டமிட்டிருக்கிறாரோ என்ற சந்தேகம் கூட அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

மும்பையில் மொத்த வார்டுகளின் எண்ணிக்கை 227. இதில் பாஜ 89 இடங்களிலும் ஷிண்டே சிவசேனா 29 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த கூட்டணியின் பலம் 118 ஆகும். அதாவது பெரும்பான்மை பலத்தை விடவும் 4 மட்டுமே அதிகம். இதில் சில கவுன்சிலர்கள் விலகினாலும், பாஜவின் மேயர் கனவு அம்போ ஆகிடும். அதே நேரத்தில் உத்தவ் சிவசேனா 29, காங்கிரஸ் 24, எம்என்எஸ் 6 இடங்களை பிடித்தன. ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 8 இடங்களை பிடித்தது. இவர்கள் உட்பட எதிர்க்கட்சியினர் அல்லது பாஜவுக்கு எதிரணியில் களமிறங்கி வெற்றி பெற்றவர்களை இழுத்தால் பாஜவை உதறி விட்டு ஷிண்டே எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மேயர் பதவியை கைப்பற்றலாம்.

இந்த நிலையில்தான் தன் கட்சி கவுன்சிலர் வேறு பக்கம் சாயாமல் இருக்கவும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் ஷிண்டே தனது கவுன்சிலர்களை பாந்திராவில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலில் தங்கவைத்திருப்பதாக கூறப்படுகிறது. அதிக இடங்களில் வெற்றி பெற்ற பாஜ மேயர் பதவியை பிடிக்க முனைப்பு காட்டும் நிலையில், தங்கள் கட்சிக்கு மேயர் பதவி வேண்டும் என்று நெருக்கடி தரும் வகையிலும், கட்சி மாறாமல் தடுக்கும் நடவடிக்கையாகவும் இவர்கள் ஓட்டலில் சிறைவைக்கப்பட்டுள்ளதாக மகாராஷ்டிரா அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Related Stories: