சென்னை: அல்மாண்ட் கிட் சிரப் இருமல் மருந்து விற்பனை மற்றும் விநியோகத்துக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. எத்திலீன் கிளைகால் என்ற உயிருக்கு ஆபத்தான வேதிப்பொருள் கலந்திருப்பது கண்டறியப்பட்டதால் தடை விதிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் அல்மாண்ட் கிட் சிரப் மருந்துக்கு தடை விதித்து உத்தரவு அளித்துள்ளது.
