மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்கவுள்ள காளைகள் மற்றும் வீரர்களுக்கு உடல் பரிசோதனை நடைபெற்று வருகிறது. அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று நடைபெறுகிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிடுகிறார்.
