அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு; சிறந்த மாடுபிடி வீரருக்கு அரசுப் பணி வழங்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றிபெறும் சிறந்த மாடுபிடி வீரருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்க்கும்போதே வீரம் வருகிறது. அலங்காநல்லூரில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கை கட்டித்தந்துள்ளோம் என பேசினார். மேலும், முன்னுரிமை அடிப்படையில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் பணி வழங்கப்படும். ஜல்லிக்கட்டு காளைகளுக்காக ரூ.2 கோடியில் அலங்காநல்லூரில் காளைகளுக்கான பயிற்சி மையம் அமைக்கப்படும் எனவும் அறிவித்தார்.

Related Stories: