மக்கள் மனங்களில் நீங்காமல் நிலைத்தவர் எம்ஜிஆர்: தொண்டர்களுக்கு எடப்பாடி கடிதம்

 

சென்னை: எம்.ஜி.ஆரின் 109வது பிறந்தநாளில் அதிமுகவை ஆட்சி பீடத்தில் அமர வைக்க உறுதி ஏற்போம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: அதிமுகவை உருவாக்கிய மக்கள் திலகத்தின் பிறந்த நாள்.

இந்த மண்ணை விட்டு மறைந்தாலும், மக்கள் மனங்களில் இருந்து நீங்காமல் நிலைத்த புகழோடு வாழ்ந்து கொண்டிருப்பவர் எம்.ஜி.ஆர். தமிழ் மொழிக்காக, தமிழ் இனத்திற்காக, தமிழ் நாட்டிற்காக, தன்னையே அர்ப்பணித்து, தமிழர்களை தலைநிமிர வைப்பதற்கும்; அநீதியை அழித்து, நீதியை நிலைநாட்டுவதற்கும் அவர் ஏந்திய ஆயுதம் தான் அதிமுக. அதிமுக இயக்கத்தை ஆட்சி பீடத்தில் மீண்டும் அமர்த்த அனைவரும் முழு மனதோடு ஈடுபட இந்நாளில் உளமார உறுதியேற்போம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Related Stories: