தொகுதி மாற்றமா? வானதி டென்ஷன்

 

கோவை: கோவை வடக்கு சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட வேலாண்டிபாளையம் பகுதியில் பாஜ சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோலப்போட்டிகள் நேற்று நடத்தப்பட்டன. இதனை பார்வையிட்ட பாஜ தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டியளித்த அவரிடம் கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பணிகளை ஆரம்பித்து விட்டீர்களா? என்ற கேள்விக்கு, ‘‘உங்கள் யூகத்துக்கு எல்லாம் பதில் அளிக்க முடியாது. கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ வேறு வேலையாக சென்றிருப்பதால் அவர் வரவில்லை. அவர் சார்பாக அதிமுகவினர் வந்து இருக்கின்றனர்’’ என டென்ஷனாக பதிலளித்தார்.

Related Stories: