விஜய்யிடம் தேர்தல் ஒப்பந்தம் போட துடிக்கும் பாஜ: செல்வப்பெருந்தகை தகவல்

கோவை: கோவையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அளித்த பேட்டி: மும்பை குறித்து அண்ணாமலை அறிவில்லாமல் பேசுகிறார். அவர் எப்போதும் ஆக்கப்பூர்வமாக, அறிவுபூர்வமாக, நாகரிகமாக பேசமாட்டார். இந்தியா கூட்டணி எக்கு கோட்டை மாதிரி வலிமையாக இருக்கிறது. பாசிச சக்திகளை, மதவாதிகளை தமிழ்நாட்டிற்குள் நுழைய விடாது.

காங்கிரஸ் கட்சிக்கு கொல்லைப்புற அரசியல் செய்யும் அவசியம் இல்லை, நேரடி அரசியல் செய்கிறோம். திமுக தவிர வேறு யாரிடமும் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. விஜய்யை புதுடெல்லி வரவழைத்து அரசியல் ஒப்பந்தம், தேர்தல் ஒப்பந்தம் போடுவதற்கு முயற்சி செய்யலாமா? என பாஜ துடித்துக் கொண்டுள்ளது என்றார்.

Related Stories: