மானாமதுரை, ஜன.12: ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகே ராஜாக்கள் பாளையத்தை சேர்ந்தவர் பக்த பிரகலாதன். இவர், மானாமதுரை அருகே உள்ள ராஜாக்கள் குடியிருப்பில் தனது உறவினரின் துக்க நிகழ்ச்சியை விசாரிப்பதற்காக, குடும்பத்தினருடன் காரில் வந்தார். மானாமதுரை அருகே தீயனூர் விலக்கு அருகே வரும்போது, கார் திடீரென நின்றது.
காரில் இருந்து இறங்கிய பக்த பிரகலாதன் காரின் முன் பக்கத்தை திறந்தபோது கார் தீப்பிடித்தது. காரில் இருந்த அனைவரும் உடனடியாக வெளியேறினர். கார் முழுமையாக எரிந்தது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் இல்லை. தேசிய நெடுஞ்சாலையில் கார் தீப்பற்றியதை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பலர் அதிர்ச்சியுடன் பார்த்து சென்றனர்.
