கருங்கல், ஜன.12: இந்திய அரியமண் தொழிற்சாலை (ஐஆர்இஎல்) மணவாளகுறிச்சி நிறுவனம் தனது சமூக பொறுப்பு நிதியின் கீழ் கருங்கல் தேர்வுநிலை பேரூராட்சிக்கு திடக்கழிவு மேலாண்மை திட்ட பயன்பாட்டிற்காக ரூ. 8 லட்சத்து 38 ஆயிரத்து 747 மதிப்பில் புதிய மினி டெம்போ வாகனத்தினை வழங்கியுள்ளது.
கருங்கல் பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த வாகனத்தை ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் ஐ.ஆர்.இ.எல் நிறுவன முதன்மை பொது மேலாளர் மற்றும் ஆலை தலைவர் செல்வராஜனிடமிருந்து, ராஜேஷ்குமார் எம்எல்ஏ வாகனத்தை பெற்றுக்கொண்டு கருங்கல் பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தார்.
நிகழ்ச்சியில் கருங்கல் பேரூராட்சி தலைவர் சிவராஜ், பேரூராட்சி செயல் அலுவலர் சத்தியதாஸ், ஐஆர்இஎல் நிறுவனத்தின் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், கருங்கல் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
