மதுரை, ஜன. 12: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் கடந்த நவ.22ல் அன்னதானம் துவங்கப்பட்டது. கோயில் அறங்காவலர் குழுத் தலைவர், அறங்காவலர்கள் தலைமையில் மாநில தலைவர் விஸ்வநாதன் அன்னதானத்தை துவக்கி வைத்தார்.
இதன்படி தினமும் காலை 6.45 மணிக்கு சுமார் 1,500 பக்தர்களுக்கு இட்லி, வெண்பொங்கல், கேசரி, தக்காளி சாதம், லெமன் சாதம் வழங்கப்பட்டு வந்தது.
ஜன.10ல் அன்னதானம் வழங்கும் பணி முடிவுக்கு வந்த நிலையில், 72 ஆயிரம் பக்தர்களும், கோயில் பணியாளர்கள், போலீசார், தூய்மை பணியாளர்கள் என, 9,600 பேரும் அன்னதானத்தில் பயன்பெற்றுள்ளனர் என்று மாவட்டஅகில பாரத ஐயப்ப சேவா சங்க தலைவர் ஐ.குருசாமி, செயலாளர் பாலமுருகன், பரவை மனோகரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
