மாநகர பேருந்து கண்ணாடி உடைப்பு: கல்லூரி மாணவன் கைது

சென்னை, ஜன.12: ஐயப்பன்தாங்கல் பணிமனையில் இருந்து அண்ணா சதுக்கம் நோக்கி கடந்த 9ம் தேதி 25ஏஏ மாநகர பேருந்து சென்றது. மெரினா காமராஜர் சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லம் அருகே உள்ள சிக்னலில் பேருந்து நின்றது. அப்போது மாநில கல்லூரி மாணவர்கள் சிலர் சிக்னலில் பேருந்தின் கதவை திறக்க கோரி ஓட்டுநரிடம் கூறினார். ஆனால் அவர் சிக்னல் என்பதால் கதவு திறக்க முடியாது என கூறிவிட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கல்லூரி மாணவர்களில் சிலர் பேருந்து படிக்கட்டு கதவின் கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து மாநகர பேருந்து ஓட்டுநர் சோமு (47) மெரினா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி போலீசார் சிசிடிவி பதிவுகளை வைத்து செங்கல்பட்டு மாவட்டம் சிறுநகர் பகுதியை சேர்ந்த அன்பரசன் (20) என்ற கல்லூரி மாணவனை கைது செய்தனர்.

 

Related Stories: