மாதவரத்தில் பாதாள சாக்கடை திட்ட பணி துவக்கம்

மாதவரம், ஜன. 12: மாதவரம் தொகுதி முழுவதும் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் அபிவிருத்தி திட்டம் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் செய்யப்பட்டுள்ளது. இதில் மண்டலம் 3, 27வது வார்டு பத்மகிரி நகர் மற்றும் மீனம்பாள் நகர் ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் விடுபட்டதால் இங்கு வசிக்கும் பொதுமக்கள் வீடுகளில் பயன்படுத்தும் கழிவு நீரை வெளியேற்றுவதில் பெரும் சிரமப்பட்டனர்.

இந்த நிலையில் விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வார்டு கவுன்சிலர் சந்திரன் மண்டலக்குழு கூட்டத்தில் தீர்மானத்தை கொண்டு வந்தார். அதன் அடிப்படையில் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து விடுபட்டிருந்த மேற்கண்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டு இதற்கான துவக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. கவுன்சிலர் சந்திரன் தலைமை வகித்தார்.

மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். அடுத்த ஒரு சில மாதங்களில் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Related Stories: