வெற்றிலை மூட்டைக்கு ரூ.10 ஆயிரம் அதிகரிப்பு

கடத்தூர், ஜன.12: தர்மபுரி மாவட்டம், கடத்தூர் பகுதியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் வெற்றிலை சந்தை நடைபெறுகிறது. இச்சந்தையில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் வெற்றிலை வாங்க வருகின்றனர். மணியம்பாடி, நல்லகுட்லஹள்ளி, கோம்பை, அஸ்தகிரியூர், முத்தனூர், கேத்திரெட்டிப்பட்டி, அய்யம்பட்டி, வேப்பிலைபட்டி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், வெற்றிலையை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

கடந்த வாரம் 128 கட்டுகளைக் கொண்ட ஒரு மூட்டை வெற்றிலை ஆரம்ப விலை ரூ.10 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.26 ஆயிரம் வரை விற்பனையானது, நேற்று நடந்த சந்தையில், ஆரம்ப விலை அதிகபட்சமாக ரூ.36 ஆயிரத்துக்கு விற்பனையானது. ஒரே நாளில் ரூ.9 லட்சத்திற்கு வெற்றிலை விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: