அரியலூர் கலெக்டர் அறிவுறுத்தல் அருண்நேரு எம்பி வழங்கினார் ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி உண்ணாவிரத போராட்டம்

ஜெயங்கொண்டம், ஜன.12: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பெயரை மாற்றிய ஒன்றிய அரசை கண்டித்து ஜெயங்கொண்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பாக மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தை மாவட்ட பொருளாளர் மனோகரன் துவக்கி வைத்தார். வட்டார தலைவர்கள் கண்ணன், சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் அறிவழகன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தலைமை நிலைய பேச்சாளர் மோகன்தாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜசேகரன் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். இப்போராட்டத்தில் பாலகிருஷ்ணன், கர்ணன், திருநாவுக்கரசு, கங்காதுரை, அழகானந்தம், சரவணன், சாமிநாதன், ராஜேந்திரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் பாலாஜி நன்றி கூறினார்.

Related Stories: