வாரணாசியில் பள்ளி, கல்லூரிகளில் தமிழ் மொழி வகுப்பு: உபி அரசு திட்டம்

வாரணாசி: உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இந்த ஆண்டு நடந்த காசி தமிழ் சங்கமத்தின்போது, வாரணாசியில் உள்ள 50க்கும் மேற்பட்ட பள்ளிகளில் சிறப்புப் வகுப்புகள் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து அரசு குயின்ஸ் கல்லூரி தினசரி மாலை நேர தமிழ் வகுப்புகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. வகுப்புகளை நடத்துமாறு மாவட்ட பள்ளி கல்வி ஆய்வாளர் உத்தரவிட்டுள்ளதாக அக்கல்லூரி முதல்வர் சுமித் குமார் கூறி உள்ளார்.

இதே போல வாரணாசியில் மேலும் பல கல்லூரிகள் தமிழ் வகுப்புகளை தொடங்குவது குறித்து பரிசீலித்து வருகின்றன. மேலும், கலாச்சாரம் மற்றும் மொழி பரிமாற்றங்களை ஆழப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, வாரணாசியில் இருந்து 50 ஆசிரியர்களை இந்தி கற்பிப்பதற்காக தமிழ்நாட்டிற்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.

Related Stories: