- அமைச்சர்
- சேகர்பாபு
- குராலகம்
- பிராட்வே பேருந்து நிலையம்
- சென்னை
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- இந்து சமய அறநிலையத்துறை
- குறளகம்…
சென்னை: பிராட்வே பேருந்து நிலையத்தில் ரூ.800 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள குறளகத்துடன் இணைந்த பல்நோக்கு போக்குவரத்து வசதி வளாகம் பெருந்திட்ட பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் துவக்கி வைக்கப்படுவதை முன்னிட்டு, அதன் முன்னேற்பாடு பணிகளை நேற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான சேகர்பாபு உயர் அலுவலர்களுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
முன்னதாக வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் சென்னை, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி, ஜவகர் நகர் நூலகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் “முதல்வர் படைப்பகம்” பணிகளை துரிதபடுத்தும் வகையில் நேரில் சென்று ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரரை அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது மேயர் பிரியா, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர், கூடுதல் தலைமைச் செயலாளர் சித்திக், மாநகராட்சி ஆணையாளர் குமரகுருபரன், மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் பிரபுசங்கர், இணை ஆணையர் (பணிகள்) சிவகிருஷ்ணமூர்த்தி, போக்குவரத்து காவல் இணை ஆணையர் (வடக்கு) திஷா மீட்டல், வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா,
சென்னை குடிநீர் வாரிய செயல் இயக்குநர் கௌரவ் குமார், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன தலைமை செயல் அலுவலர் ஸ்வேதா சுமன், திட்ட இயக்குநர் அர்ஜுனன், சென்னை குடிநீர் வாரிய தலைமை பொறியாளர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் முருகன் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
