- பொங்கல் திருவிழா
- அமைச்சர்
- சிவசங்கர்
- அரியலூர்
- ஆம்னி பேருந்து
- போக்குவரத்து
- மின்சாரம்
- சிவசங்கர்
- பொங்கல் பண்டிகை நாள்
- ஆம்னி
அரியலூர்: ஆம்னி பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரியலூரில் போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
பொங்கல் பண்டிகை தினத்தில் கடந்த காலங்களில் ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணித்தோர், தற்பொழுது அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணித்து வருகின்றனர். நீண்ட தூர பயணங்களுக்கு அரசு பேருந்துகள் இல்லாத ஊர்களுக்கு வேண்டுமானால், ஆம்னி பேருந்துகளில் கட்டண உயர்வு என்பது இருந்திருக்கலாம்.
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வது குறித்து இதுவரை எந்த புகாரும் முறையாக வரவில்லை. மேலும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பகுதியிலும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு கட்டண உயர்வு குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆய்வில் கட்டண உயர்வு குறித்து புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். 20 ‘டபுள் டெக்கர்’ பேருந்துகளை வாங்குவதற்கு மாநகர போக்குவரத்துக்கழகம் டெண்டர் விட்டுள்ளது. அந்த டெண்டர் விரைவிலே முடிவுற்று பேருந்துகள் வாங்கி சென்னையிலே முதற்கட்டமாக நடைமுறைக்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
