×

தமிழ்நாடு முழுவதும் நேற்று வரை பொங்கல் பரிசுத்தொகை ரூ.5587.02 கோடி விநியோகம்: அமைச்சர் தகவல்

சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று வரை பொங்கல் பரிசு தொகை ரூ.5587.02 கோடியும், 1,39,06,292 வேட்டி, சேலைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் தெரிவித்துள்ளதாவது: கடந்த 8ம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு, வேட்டி, சேலை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு, அந்த தேதியில் வழங்கப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த டிஜிட்டல் மயமான காலகட்டத்தில் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகை ரொக்கமாக வழங்கிட கூட்டுறவுத் துறையின் சிறப்பான திட்டமிடல் மற்றும் தொய்வில்லாமலும், விரைவாக குறைந்த காலத்தில் வழங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை பிற தேசிய வங்கிகள் செய்ய முடியாததை, கூட்டுறவு வங்கி திறம்பட செய்து சாதித்துள்ளது.

11ம் தேதி(நேற்று) வரை 24,924 நியாயவிலை கடைகளில் உள்ள 1,86,23,426 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் ரொக்கத் தொகை ரூ. 5587.02 கோடி விநியோகம் செய்யப்பட்டுள்ளது. 1,39,06,292 வேட்டி, சேலைகளும் வழங்கப்பட்டுள்ளது . இவ்வாறு கூட்டுறவு துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

Tags : Tamil Nadu ,Chennai ,Minister ,Periyakaruppan ,
× RELATED கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு...