சென்னை: ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் தாஸ் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட பென்ஷன் திட்டத்தை இந்தியாவே திரும்பிப் பார்க்கின்ற வகையில் முதல்வர் அறிவித்தார். ஆசிரியர், அரசு ஊழியர்கள் நெஞ்சில் என்றும் நிலை கொண்டு விட்ட தமிழ்நாடு முதல்வருக்கு ஜாக்டோ -ஜியோ சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த அரசாணையில் 50 விழுக்காடு பணி நிறைவு பெறுகின்ற போது கடைசியாக பெறும் ஊதியத்தில் 50 விழுக்காடு பென்ஷன் ஆகவும், வழங்குவது ஒரு உறுதிப்படுத்தப்பட்ட பென்ஷன் ஆக பார்க்க முடிகிறோம். அது மட்டுமல்லாமல் அவர்களுடைய வாரிசுதாரர்களுக்கு குடும்ப பென்ஷன் வழங்குவதும் வரவேற்கத்தக்க விஷயமாக நம்பிக்கை கூறப்பட்ட விஷயமாக பார்க்க முடிகிறது.
மேலும் டிசிஆர்ஜி 25 லட்சம் வழங்குவதும் அதைவிட கூடுதலாக தமிழ்நாடு முதல்வர் பணி கொடையை 30 விழுக்காடு வழங்கி இருக்கிறார். இது மேலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர் மத்தியிலே இரட்டிப்பு மகிழ்ச்சி அடைகின்றோம், இதைவிட கூடுதலாக பணி நிறைவு செய்யும் பொழுது தவிர்பு சிபிஎஸ் ஆப்ஷனல் கொடுத்திருப்பது இந்த பரபரப்பு செய்தியாக உள்ளது.
இது ஒரு மனநிறைவான பென்சனாக இது வழங்கப்பட்டிருப்பது எதிர்முனை பிரசாரங்களை தூள்தூளாக்கி இருக்கிறார்கள். மேலும் இடைநிலை ஆசிரியருடைய ஊதிய முரண்பாடுகள் நீக்கி மத்திய ஆசிரியர் இணையாக வழங்க வேண்டும். பி.லிட். தமிழ் படித்தவர்களுக்கு தணிக்கையில் இருந்து நீக்குவது 5400 தணிக்கை தடை நீக்குதல் உள்ளிட்ட எண்ணற்ற கோரிக்கைகளை நிவர்த்தி செய்வார், சத்துணவு அங்கன்வாடி, ஊர்ப்புற நூலகர்கள், ஊராட்சி செயலாளர், சாலை பணியாளர் உள்ளிட்ட அனைவரின் கோரிக்கையும் நிறைவேற்றிட வேண்டும்.
இதற்காக தமிழ்நாடு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்கின்ற மகத்தான தலைவர் 26 மேலும் பல விடியலை தருவார். ஆசிரியர், அரசு ஊழியர்கள், அரசு பணியாளர்கள் தமிழ்நாட்டில் வாழ்நாள் முழுக்க கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம். இந்த பென்ஷன் வழங்கிய தமிழக முதல்வருக்கு தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாகவும் ஜாக்டோ -ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
