ராமேஸ்வரம்,ஜன.10: பாம்பன் அன்னை ஸ்கொலஸ்டிகா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படைப்பு கண்காட்சி நடைபெற்றது. ராமேஸ்வரம் அருகே பாம்பன் அன்னை ஸ்கொலஸ்டிகா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று முன்தினம் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. கல்லூரி தாளாளர் அருட்சகோதரி அமுதா தியோஸ் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். வட்டாட்சியர் முரளிதரன் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. அறிவியல், வாழ்வியல் குறித்த கருத்துக்களை கல்லூரி முதல்வர் ஆனி பெர்பெட் சோபி உரையாற்றினார்.
மாணவர்களின் அறிவியல் படைப்புகள், பலவிதமான ரூபாய் நாணயங்கள், நூற்றுக்கணக்கான புத்தகங்கள், கடல் சிப்பிகளால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள் கண்காட்சியில் இடம் பெற்றன. தமிழ்நாட்டின் பாரம்பரிய ஆடை அணிவகுப்பு நடந்தது. தீவில் உள்ள பல்வேறு பள்ளி,கல்லூரிகளின் மாணவ,மாணவிகள் ஏராளமானோர் இந்நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர். கைம்பெண் நங்கூரம் மகளிர் அமைப்பு சார்பில் இயற்கை அங்காடி விற்பனை செய்யப்பட்டது. இக்கண்காட்சியில் நுகர்வோர் மைய தலைவர் ஜான்போஸ், வனிகர் சங்க செயலாளர் பாண்டி மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பேராசிரியை சுவிக்லின் நன்றி தெரிவித்தார்.
