அரசு பேருந்தில் போகும் ஊர் குறித்த தகவல் இல்லாததால் பயணிகள் அவதி

பந்தலூர், ஜன.10: கூடலூர் அரசு போக்குவரத்து கிளையில் இருந்து நாடுகாணி, தேவாலா, பந்தலூர் வழியாக தாளூருக்கு இயக்கப்படும் அரசு பேருந்தில் எந்த ஊருக்கு செல்கிறது என்ற தகவல் பலகை இல்லை. இதனால், பயணிகள் ஓட்டுநர் மற்றும் பேருந்தில் பயணிக்கும் பயணிகளிடம் விசாரித்து அதன்பின் பேருந்தில் ஏறி பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இது போன்ற குழப்பங்கள் இல்லாமல் பேருந்துகளில் முறையாக வழித்தடங்கள் குறித்து பெயர் பலகைகளை வைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

Related Stories: